ETV Bharat / bharat

"செங்கோட்டையில் கழிப்பறை பிரச்சினை, பெண்கள் கண்ணியம் குறித்து பேசிய முதல் பிரதமர் நான்" - பிரதமர் மோடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 10:04 PM IST

PM Modi: டெல்லி செங்கோட்டையில் கழிப்பறை பிரச்சினை மற்றும் பெண்களின் கண்ணியம் குறித்து பேசிய முதல் பிரதமர் தான் என டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : மக்களவை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தொண்டர்கள் அடுத்த 100 நாட்கள் புது வேகத்துடனும், தன்னம்பிக்கையுடன் அரசியல் பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பாஜகவின் இரண்டு நாள் தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது.

இதில் இன்று (பிப். 18) இரண்டாவது நாள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் கழிப்பறை பிரச்சினை மற்றும் பெண்களின் கண்ணியம் குறித்து டெல்லி செங்கோட்டையில் பேசிய முதல் பிரதமர் தான் என்று கூறினார். எதிர்கால இந்தியா என்ற இலக்கை இளைஞர்கள் சக்தி, பெண்கள், விவசாயிகள் மற்றும் இளம் சமுதாயத்தினரை கொண்டு பாஜக ஒன்றிணைப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இனி வரும் காலங்களில் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் கூறினார். மிஷன் சக்தி பெண்களுக்கான பாதுகாப்பு நிறைந்த முழுமையான சுற்றுசூழலை உருவாக்கும் என்றும், 15 ஆயிரம் பெண்கள் தன்னாட்சி குழுக்கள் உருவாக வழிவகை செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

விவசாயத்தில் விஞ்ஞான வளர்ச்சியை புகுத்தும் நோக்கமாக ட்ரோன் திதி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், லக்பதி திதீஸ் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 3 கோடி பெண்கள் பயனடைய உள்ளதாகவும் பிரதமர் கூறினார். நாட்டு மக்களின் 500 ஆண்டு கால எதிர்பார்ப்பை பாஜக நிறைவு செய்து உள்ளதாகவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், 500 ஆண்டுகளுக்கு பின்னர் குஜராத் பவகத் பகுதியில் மத கொடி ஏற்றப்பட்டதாகவும், ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பின்னர் கர்தாபூர் ஷாகீப் நெடுஞ்சாலை திறக்கப்பட்டதாகவும் கூறினார். அதேபோல் 70 ஆண்டுகளுக்கு பின் 370 அரசியலமைப்பு சட்டத்திற்கு விடுதலை கிடைத்து உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அடுத்த 100 நாட்கள் புதிய வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பாஜக தொண்டர்கள் புது உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் தன்னப்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற தேசம் இப்போது பெரிய கனவுகள் மற்றும் பெரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று மோடி கூறினார். அடுத்த ஐந்தாண்டுகள் முக்கியமானதாக இருக்கும் என்றும் விக்சித் பாரத் இலக்கை நோக்கி ஒரு பெரிய பாய்ச்சலை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பாஜகவில் இணையும் கமல்நாத்? தகுதி நீக்கம் செய்ய முடியாதா! சட்ட நிபுணர்கள் கூறும் சிக்கல்கள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.