ETV Bharat / bharat

சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச்சண்டை.. பாதுகாப்பு படையினர் 3 பேர் பலி 14 பேர் காயம்!

author img

By PTI

Published : Jan 30, 2024, 9:47 PM IST

chhattisgarh naxal attack:சத்தீஸ்கர் பிஜாப்பூர் - சுக்மா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

chhattisgarh-naxal-attack
சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச்சண்டை

சத்தீஸ்கர்: இந்தியாவில் உள்ள சத்தீஸ்கர்,ஒடிசா,தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனை தடுப்பதற்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் கூட நக்சல்கள் தாக்குதல் அவ்வபோது நிகழ்ந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கர் பிஜாப்பூர் - சுக்மா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும் பாதுகாப்புப் படை வீரர்கள் 14 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்களை விமானம் மூலம் ராய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் குறைந்தது ஆறு நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நக்சல்கள் நடமாட்டத்தைத் தடுத்து, மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை செய்து தரும் வகையில், பீஜப்பூர் - சுக்மா எல்லையில் உள்ள தெகல்குடெம் என்ற கிராமத்தில் புதிய பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் ஜோனகுடாவிற்கும் அலிகுடாவிற்கும் இடைப்பட்ட பகுதியே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து பஸ்தார் ஐஜிபி சுந்தர் ராஜ் கூறுகையில், தற்போது என்கவுண்டர் நடைபெற்ற இதே இடத்தில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 23 பேர் கொல்லப்பட்டனர்.

33 பேர் காயம் அடைந்தனர் என்றார். சத்தீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் ஒரு ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதில் பேசிய அவர், "நக்சலிசம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்படும். நக்சலிசம் மனித குலத்திற்கு ஒரு சாபக்கேடு. அதன் அனைத்து வடிவங்களிலும் அதை வேரோடு பிடுங்குவதில் உறுதியாக இருக்கிறோம்" எனத் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: கோவையில் 'My V3 Ads' நிர்வாகிகள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.