ETV Bharat / bharat

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக வலுக்கும் போராட்டம் - நெதன்யாகு ராஜினாமா செய்ய மக்கள் ஆர்ப்பாட்டம்! - Israel Protest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 12:29 PM IST

இஸ்ரேலில் பிரதமர் நெதயான்கு பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தில் பொது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

டெல் அவிவ் : ஹமாஸ்க்கு எதிரான போரை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம் பூதாகரம் அடைந்து உள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகக் கோரியும், முன்கூட்டியே நாட்டில் தேர்தல் நடத்தக் கோரியும் பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெலி அவிவ் பகுதியில் திரண்ட மக்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகக் கோரியும், பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட ஹமாஸ் மக்களவை விடுவிக்கக் கோரியும் இஸ்ரேல் மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுக்கு எதிரான பதாகைகளை சுமந்து கொண்டு சென்ற மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதாக சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் தாக்குதலை தொடங்கியது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஏறக்குறைய 250 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 130 பேர் இன்னும் காசாவில் இருப்பதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், விடுவிக்கப்பட்டவர்களில் 33 பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பிறகு காஸாவில் மோதல் தீவிரமடைந்து காணப்படுகிறது. காஸா பகுதியில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500 பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் இதனால் உயிரிழப்புகள் மற்றும் பணயக் கைதிகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் இஸ்ரேல் உடனடியாக போர் நிறுத்த பணிகளில் ஈடுபட வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முன்னரும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், அதை தன்னிடம் உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்தது. இந்த நிலையில், கடைசியாக கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கவில்லை. இஸ்ரேல் மீது அமெரிக்கா அதிருப்தியில் இருப்பதன் காரணமாக தீர்மானத்தை நிராகரிக்கவில்லை எனக் கூறப்பட்டது.

இதையும் படிங்க : "காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது" - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.