மின்சாரம் சேமிப்பு.. வைரலாகும் தருமபுரி எம்.எல்.ஏ வீடியோ!
Published: May 26, 2023, 1:54 PM

தருமபுரி: நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட எச்சனஹள்ளி கிராமத்தில் திருமண நிகழ்வுக்காகப் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.பி வெங்கடேஸ்வரன் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எச்சனஅள்ளி பகுதியில் உள்ள தெரு விளக்கு பகல் 12 மணியைக் கடந்தும் எரிந்ததைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்தி தெரு விளக்கை சுவிட்ச்ஆப் செய்து உள்ளார்.
பின், அங்கு இருந்த பொது மக்களை அழைத்து “பகலிலும் மின்விளக்கு எரிகிறது. இது யாருக்கும் பயனில்லாமல் வீணாகத்தானே உள்ளது. இதனால் வீணாக மின்சாரம் செலவாகிறது. இரவு நேரத்தில் மின் விளக்கைப் பயன்படுத்தி விட்டு பகல் நேரத்தில் ஆப் செய்து பயன்படுத்துங்கள்” என அறிவுரை வழங்கி விட்டு அங்கிருந்து சென்றார்.இந்த நிகழ்வு குறித்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் விரைவாகப் பரவி வைரலாகிக் கொண்டு வருகிறது.
இதேப் போல் கடந்த வருடம் எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள பெண்கள் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளார். அப்போது பள்ளியின் கழிவறை சுத்தமாக இல்லாத காரணத்தால் தானே களத்தில் இறங்கி கழிவறையைத் தூய்மை செய்து உள்ளார். மேலும் ஆசியர்களுக்கு அறிவுரையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி மாஸ்டர் பிளான்.. சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்!