கோவில்பட்டியில் செல்போன் கடையில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு!

By

Published : May 21, 2023, 4:02 PM IST

thumbnail

தூத்துக்குடி: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் முத்து கணேசன் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு இன்று காலை கடையைத் திறக்கும்பொழுது, கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக கடையைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபொழுது விலை உயர்ந்த ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச், சார்ஜர் உள்ளிட்ட மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடு போய் உள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கடையின் ஷட்டரை உடைத்து, நான்கு பேர் கடையில் உள்ள பொருட்களை எடுத்துவிட்டு ஜாலியாக நடந்து செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது‌.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டி நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது. இரவு நேரங்களில் ரோந்து காவலர்கள் கூடுதலாகப் பணியில் அமர்த்தப்படாததால் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் பொறுப்பேற்ற பின்பு இம்மாதிரியான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.