கல்வி கற்க தினமும் 24 கி.மீ., பயணம்... விளிம்பு நிலை வாழ்க்கையிலிருந்து விளம்பரத் தூதரான பெண்!

By

Published : Jan 12, 2021, 6:17 AM IST

thumbnail

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. இந்த பழமொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் ரோஷிணி பதோரியா. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் நகருக்கு அருகே உள்ள அஜ்நவுல் கிராமத்தில் வசிக்கும் இவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.5 விழுக்காடு மதிப்பெண் பெற்று மாநில அளவில் எட்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். தனது வீட்டிலிருந்து தினந்தோறும் 24 கி.மீ., சைக்கிளில் பள்ளிக்குச் சென்று படித்த அவர், இந்த வெற்றியை ஈட்டியுள்ளார். இவரது இந்த சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் இமார்த்தி தேவி, இந்தச் சிறுமியை தனது துறையின் விளம்பரத் தூதராக நியமித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.