ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் திருத்தேர் பவனி
Published on: May 12, 2022, 12:46 PM IST

திருவள்ளூர்: ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் திருத்தேர் பவனி பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று (மே.12) நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் கைகளில் உப்பு ஏந்தி தேர் பவனி செல்லக்கூடிய சக்கரத்தில் கீழே கொட்டி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். மேளதாளத்துடன் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் தேர் பவனி நான்கு மாட வீதி வழியாக நடந்து கொண்டிருக்கிறது.
Loading...