தை அமாவாசை: பூம்புகார் காவிரி சங்கமத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
Published on: Jan 21, 2023, 3:04 PM IST

மயிலாடுதுறை: தை மாதத்தில் வரும் அமாவாசை இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆகையால் பூம்புகாரில் காவிரி ஆறு கடலுடன் கலக்கும் சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
Loading...