தேளை கையில் வைத்து கர்நாடகாவில் விநோத வழிபாடு
Published on: Aug 3, 2022, 9:30 PM IST

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில், கந்தகுரா கிராமத்தில் கொண்டமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் அரிதான தேள் சிலை உள்ளது. இங்கே நாகபஞ்சமி அன்று மட்டும் தேள் தோன்றி, பக்தர்களுக்கு காட்சி அளிப்பதாகவும், அந்நாளில் மட்டும் கையில் எடுத்தாலும் தேள் யாரையும் கொட்டாது என கிராம மக்கள் கூறுகின்றனர். அதன்படி நாக பஞ்சமியான இன்று (ஆக.03) கோயிலில் பக்தர்கள் தேளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.
Loading...