மொஹாலி குண்டுவீச்சு- பகீர் சிசிடிவி!
Published on: May 12, 2022, 4:44 PM IST

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மாநில காவல்துறையின் உளவுத்துறை தலைமையகத்தில் ராக்கெட் போன்ற கையெறி குண்டுகள் விழுந்துள்ளன. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகள் சாலையின் குறுக்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திடீரென கட்டடத்தின் அருகே வந்த காரிலிருந்து ராக்கெட் போன்று வெடிபொருள் தாக்குகிறது. இந்தத் தாக்குதலால் வீடியோவின் மீது திடீரென ஒளி பட்டது. இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், அந்த ஒளியானது அருகில் உள்ள பகுதிகளை ஒளிரச் செய்து, கேமரா திடீரென நின்று விட்டது.
Loading...