ஒகேனக்கல்லில் குளிக்க தடை
Published on: Jun 18, 2022, 5:38 PM IST

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 5 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Loading...