வீடியோ: புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பால்குட திருவிழா
Published on: Jan 21, 2023, 8:24 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியின் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று(ஜன.21) 15 ஆம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. அந்த வகையில் 1,008 பால்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். கோயில் வாயிலில் தருமபுர ஆதீனம் 27ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சக்தி கரகத்திற்கு தீபாராதனை செய்து வரவேற்று வழிபாடு செய்தார்.
Loading...