சின்ன அடியும் சிந்தனையைத் தடுக்கும்; குழந்தைகளைப் பாதிக்கும் மூளைக்காயம்...அலட்சியம் வேண்டாம்!

author img

By

Published : Sep 14, 2022, 3:09 PM IST

சின்ன அடியும் சிந்தனையை தடுக்கும்; குழந்தைகளை பாதிக்கும் மூளைக் காயம்...அலட்சியம் வேண்டாம்

அதிர்ச்சிகரமான மூளைக்காயம் எனப்படும் Traumatic Brain Injury(TBI)யால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நடத்தை, உணர்ச்சிகளில் பிரச்னை ஏற்படுகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

வாஷிங்டன்: அதிர்ச்சிகரமான மூளைக்காயம் (டிபிஐ) பாதித்த குழந்தைகளுக்கு, உணர்ச்சிகளில் குறைபாடு, நடவடிக்கைகளில் பிரச்னைகள் இருப்பதாக டெல் மான்டே இன்ஸ்டிடியூட் ஃபார் நியூரோ சயின்ஸின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஓடி விளையாடும் குழந்தைகளுக்கும் ஏற்படும் சிறிய காயங்களிலும் பெரிதும் அக்கறை காட்ட வேண்டியது அவசியமானதாகும்.

நிமிடங்கள் முதல் மணிக்கணக்கில் சுயநினைவு இழப்பு, தொடர்ச்சியான தீவிர தலைவலி, அடிக்கடி ஏற்படும் வாந்தி அல்லது குமட்டல், வலிப்பு அல்லது வலிப்புக்கான பாதிப்புகள், மூக்கு அல்லது காதுகளில் இருந்து தெளிவான திரவம் வெளியேறுவது, தூக்கத்திலிருந்து எழுந்திருக்க இயலாமை போன்றவை டிபிஐ-யின் அறிகுறிகளாகும்.

தலையில் ஏற்படும் இந்த அடிகள் குறித்து அறிவது கடினம். ஏனென்றால், தலையில் ஏற்படும் அடிகளுக்காக மருத்துவரிடம் பெரும்பாலும் செல்லாததால் இந்த காயங்களை யாரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை என்று தொற்றுநோயியல் திட்டத்தில் பிஹெச்டி பெற்ற ஆய்வாளரும், நியூரோ இமேஜ் குறித்து முதலில் பதிவிட்ட ஆசிரியருமான டேனியல் லோபஸ் கூறினார்.

டேனியல் மேலும் கூறியதாவது, "லேசான காயங்கள் கூட வளரும் மூளையை மிகவும் பாதிக்கிறது. பதின்பருவ மூளை அறிவாற்றல் வளர்ச்சி (ஏபிசிடி) ஆய்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட எம்ஆர்ஐ மற்றும் நடவடிக்கைகள் குறித்த தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர். லேசான டிபிஐ குழந்தைகளுக்கு 15 விழுக்காடு உணர்ச்சி அல்லது நடத்தை பிரச்னைகளை அளிப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இந்த ஆபத்து அதிகமாக இருந்தது.

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் ஏபிசிடி ஆய்வுக்கான தரவுகளை சேகரிக்கும் 21 ஆராய்ச்சி தளங்களில் ரோசெஸ்டர் மருத்துவ மையம் பல்கலைக்கழகமும் ஒன்றாகும். 2017 முதல் ரோசெஸ்டர் பகுதியைச்சேர்ந்த 11,750 குழந்தைகளில் 340 குழந்தைகள் வயதுக்கேற்ற முதிர்ச்சி அடைவதில் 10 ஆண்டுகள் வரை பின் தங்கியுள்ளனர். இது அவர்களின் உயிரியல் வளர்ச்சி, நடத்தைகள் மற்றும் அனுபவங்கள், மூளை முதிர்ச்சி மற்றும் அவர்களின் வாழ்க்கையின் பிற அம்சங்களான கல்வி சாதனை, சமூக வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் உட்பட பலவற்றை பாதிக்கிறது.

எதிர்கால ஏபிசிடி ஆய்வுத் தரவுகள், மனநலம் மற்றும் மனநலப் பிரச்னைகளில் இந்த டிபிஐ-யினால் ஏற்படும் தாக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். "மனநலப் பிரச்சனைகள் அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடைய சில மூளைப் பகுதிகள் டிபிஐயின் போது பாதிக்கப்படுவதை நாங்கள் அறிவோம்" என்று இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் இணைப் பேராசிரியரும், ஏபிசிடி ஆய்வின் இணை முதன்மை ஆய்வாளருமான எட் ஃப்ரீட்மேன், கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பண்டிகை காலத்தில் பளபளக்கும் ஆடைகளோடு ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.