விருதுநகரில் கோலாகலத் திருவிழா - சாக்கு உடை அணிந்து விநோத நேர்த்திக்கடன்

author img

By

Published : Oct 15, 2021, 7:49 PM IST

செம்பட்டி திருவிழா

விருதுநகர் அருகேவுள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோயிலில் நடந்த புரட்டாசி மாத பொங்கல் விழாவில், சாக்கு உடை அணிந்துகொண்டு பக்தர்கள் விநோத நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

விருதுநகர்: கரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின், அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோயில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மனுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

அம்மனுக்கு பக்தர்கள் காப்புக்கட்டி, விரதம் இருந்தும், அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

விநோத நேர்த்திக்கடன்

அதேபோல், விழாவின் முக்கிய நிகழ்வாக சாக்கு, பழைய ஆடைகள், பல்வேறு வகையான முகமூடிகள் அணிந்து உடலில் சேற்றைப் பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடமிட்டு அம்மனை வழிபட்டனர்.

இதற்கிடையே, பக்தர் ஒருவர் கரோனா கவச உடை அணிந்தும், கையில் மாஸ்க் அணிவது குறித்த பதாகையை ஏந்தியபடியும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

செம்பட்டி திருவிழா

இந்த புரட்டாசி மாத பொங்கல் திருவிழாவைக் காண அக்கிராமத்தைச் சுற்றியுள்ள ஏராளான கிராம மக்கள் திரளாக வந்தனர்.

இதையும் படிங்க: அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் புரட்டாசி மாதத் திருவிழா தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.