குற்றவாளிகளின் பட்டியலை மறுசீராய்வு செய்ய வேண்டும்...எம் பி ரவிக்குமார் கோரிக்கை

author img

By

Published : Sep 14, 2022, 7:13 AM IST

Updated : Sep 14, 2022, 7:25 AM IST

Etv Bharat

குற்றவாளிகளின் பட்டியலை மறுசீராய்வு செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு எம் பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்: விழுப்புரம் சரக டிஜிபிக்கு, நாடளுமன்ற உறுப்பினர் எம்பி ரவிக்குமார் நேற்றைய முன்தினம் (செப்.12) மனு ஒன்று எழுதியுள்ளார்.

அதில் "தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டிருக்கும் காவல்துறை நிலை ஆணை (PSO) பிரிவு 746 முதல் 749 வரை, ஒரு நபரை கேடி லிஸ்டில் சேர்ப்பதற்கும், ரௌடி லிஸ்டில் சேர்ப்பதற்குமான வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெரும்பாலான காவல் நிலையங்களில் இந்த வழிகாட்டுதல் பின்பற்றப்படுவது கேள்வி குறியாகவே உள்ளது.

மாறாக ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக, அரசியல் கட்சிகளில் இருந்து பாடுபடும் தனிப்பட்ட நபர்களின் பெயர்களை மனம்போன போக்கில் காவல்துறை ஏடுகளில் பதிவேற்றம் செய்கின்றனர்.

இந்த பட்டியலானது காவல்துறை நிலை ஆணையில் சொல்லப்பட்டிருக்கும் விதிமுறைகள் போன்று பட்டியலை சீராய்வு செய்வதோ, பெயர்களை நீக்குவதோ கிடையாது. ஒருவேளை பட்டியலில் தொடர்ந்து சில பெயர்கள் நீடிக்க வேண்டும் என்றால் அதற்கான உத்தரவை உயர் அதிகாரிகளிடம் முறையாக பெறுவதும் கிடையாது.

இதை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை WP (Md) No.19651 Of 2017 Vs The Assistant Commissioner Of Police, Madurai on 26 September, 2018 என்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த தீர்ப்புக்குப் பிறகும் கூட, தற்பொழுது வரை பழைய நிலையே நீடிப்பது மிகவும் மன வேதனை அளிக்கிறது.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நாகேஸ்வர ராவ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தொடர்பான வழக்கின் போது சென்னை உயர்நீதிமன்றம் கடந்த (ஜூலை 7) ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவினை காவல்துறையினர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

தற்பொழுது விழுப்புரம் மாவட்ட தலைமையின் கீழ் உள்ள காவல் நிலையங்கள் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கேடி மற்றும் ரவுடி லிஸ்ட் பட்டியலை மறு சீராய்வு செய்து பொருத்த மற்றவர்களின் பெயர்களை அதிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பேரிடர் சவால்களை எதிர்கொள்ள அனைத்துத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்...இறையன்பு

Last Updated :Sep 14, 2022, 7:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.