பள்ளிப் பருவம் தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: விழுப்புரம் கலெக்டர் அட்வைஸ்

author img

By

Published : Jan 13, 2023, 3:53 PM IST

பள்ளிப் பருவம் தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு!

பள்ளிப் பருவம் தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் விழிப்புணர்வு அளித்தார்.

விழுப்புரம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள பிளஸ் - 2 மாணவ, மாணவியர்கள் 30 பேருடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது; 'பள்ளிப்பருவம் தான் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானம் செய்யக் கூடிய சிறந்த கால கட்டம். மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தங்களின் வாழ்க்கையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய நிலை உள்ளதால், ஒவ்வொருவரும் படிக்கின்ற காலத்தில், தங்களுக்குண்டான இலக்கினை தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

அதனை அடைவதற்கு முழு முயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். வாழ்க்கையினை தீர்மானிக்கும் சக்தி உங்கள் கைகளில் தான் உள்ளது. சிறு சந்தோஷம் தரக்கூடிய "மொபைல் போன், வாட்ஸ்அப், ஃபேஸ்புக்" போன்ற கவனம் சிதறக்கூடிய செயல்களில் ஈடுபடாமல், லட்சியத்தை அடைவதற்காக நல்ல முறையில் கல்வி பயில வேண்டும்.

உங்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திடும் வகையில் நல்ல முறையில் படித்து, உங்களுக்கும் உங்கள் ஆசிரியர்களுக்கும், இந்த மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்' என கலெக்டர் கூறினார். கூடுதல் கலெக்டர் சித்ரா, திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா ஆகியோர் ஐ.ஏ.எஸ்., தேர்வு குறித்தும், எதிர்கால திட்டமிடல் குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

இதையும் படிங்க: வேங்கை வயல் சம்பவத்தில் பா.ரஞ்சித் பரபரப்பு புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.