முதல் ஆர்ப்பாட்டம் புறக்கணித்த சூர்யா

author img

By

Published : May 11, 2022, 5:49 PM IST

Updated : May 11, 2022, 8:37 PM IST

Bjp protest, TRICHY

திருச்சியில் மாணவர்களிடம் கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பாஜகவினரின் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அண்மையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சூர்யா சிவா திருச்சியில் இருந்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் மில்கேட் முன்பு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கன்டோன்மென்ட் மண்டல தலைவர் மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராம்ஜிநகர் பகுதியை மையமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா விற்கப்படுவதாக கூறப்பட்டது.

எனவே, உடனடியாக கஞ்சா விற்பனையை தடை செய்ய காவல்துறையினர் முன்வர வேண்டும். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதுமட்டுமின்றி கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றால் நாங்களே நேரில் சென்று காந்திநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்போம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

சூர்யா மிஸ்ஸிங்: இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகர், இல.கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கள்ளிக்குடி ராஜேந்திரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சூர்யா சிவா திருச்சியில் இருந்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

முதல் ஆர்ப்பாட்டம் புறக்கணித்த சூர்யா சிவா

இதையும் படிங்க: எம்ஜிஆர் கட்சியை விட்டு போன போதே கவலை படவில்லை, வைகோவை தூக்கி எறிந்தோம் - ஆர்.எஸ் பாரதி அதிரடி பேச்சு

Last Updated :May 11, 2022, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.