திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர் மனைவி மற்றும் மாமியாருடன் சில காலம் ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளார்கடந்த சில வருடங்களாக அந்த இளைஞருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது இதனால் பலமுறை மாமியார் தன்னுடைய மருமகனை கண்டித்துள்ளார் மகளிடம் இதை பற்றி சொல்லவும் அவரும் கணவனிடம் தகராறு செய்து கண்டித்து உள்ளார் இருப்பினும் அந்த இளைஞர் திருந்தவில்லை எனக் கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 5ம் தேதி வழக்கம் போல் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்த இளைஞர் மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது இதனால் ஆத்திரமடைந்த மனைவி மற்றும் மாமியார் இருவரும் அந்த இளைஞரை கண்டித்துள்ளனர்அப்போதும் இளைஞரின் மோகம் அடங்காததால் சமையல் அறைக்கு சென்று சுடு தண்ணீரில் மிளகாய்ப் பொடியை கலந்து 2 பேரும் அந்த இளைஞர் மீது ஊற்றி உள்ளனர் இதில் அந்த நபர் உடல் முழுவதும் வெந்து போய் வலியால் துடி துடித்துள்ளார் அவரது அலறலை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்அங்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இளைஞர் மீது சுடு நீரை ஊற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுமே இது குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி மாமியார் 2 பேரையுமே விசாரித்து வந்தனர் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மாமியார் மற்றும் மனைவியை ஆகியோரை கைது செய்தனர் தன் அம்மாவுக்கு பாலியல் தொல்லை தரக்கூடாது என்று கணவருக்கு அடிக்கடி அறிவுறுத்தியும் இது போன்ற காரியத்தில் அவர் ஈடுபட்டதாக உயிரிழந்த இளைஞரின் மனைவி தெரிவித்துள்ளார் ஒவ்வொரு முறையும் பொறுமையாக எடுத்துக் கூறியும் கணவர் கேட்காதால் ஆத்திரத்தில் இதை செய்ததாக அந்தப்பெண் தெரிவித்துள்ளார் முன்னதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தாய் வீட்டிற்கு சென்றதாகவும் கூறிய அந்தப்பெண் உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை ஏற்க மறுத்த கணவருடன் வாழ்விருப்பமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறதுசம்பவத்தன்று மனைவியை அழைத்து வர மாமியார் வீட்டிற்கு சென்ற இளைஞர் அங்கு ரகளையில் ஈடுபட்ட நபர் மாமியாரிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது இதையும் படிங்க நல்லா தூங்குனீங்களா இன்று உலக தூக்க தினம்