பால், மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வை குறைக்க வேண்டும் - சி.மகேந்திரன்

author img

By

Published : Nov 8, 2022, 8:04 AM IST

மத்திய அரசின் பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் தான் தமிழ்நாட்டில் பால் விலை உயர்வு - சி.மகேந்திரன் பேட்டி

பால், மின்சாரம், சொத்துவரி உயர்வுக்கு பொருத்தமான வழிகளைக் கண்டு அந்த சுமைகளை குறைக்க வேண்டும் என சிபிஐ முன்னாள் தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி: மணப்பாறை கோவில்பட்டி சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தின கொடி ஏற்றி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லா மாநிலங்களிலும் இருக்கின்ற அனைத்து கட்சிகளையும் அகற்றிவிட்டு ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் பாஜகவை கொண்டு வர வேண்டும் என்று மறைமுகத் திட்டத்தில் உள்ளார்கள்.

மூவாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு அரசின் பொருளாதார கொள்கைகளை சிதைக்க பல வழிகளில் முயற்சிக்கிறார்கள்."தமிழ்நாடு மக்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எதிராக பாரதிய ஜனதா கட்சி சதி செய்கிறது" காரணம் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

அது இல்லாமல் பிரச்சனையே இல்லாதவைகளை பிரச்சனைகளாக கொண்டு வருவதற்கென்று அந்தக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,எச்.ராஜா போன்ற நபர்களை வைத்துள்ளார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக குழப்பத்தை உண்டாக்க வேண்டும்.

மத்திய அரசின் பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் தான் தமிழ்நாட்டில் பால் விலை உயர்வு - சி.மகேந்திரன் பேட்டி

பல நெருக்கடி தர வேண்டும். உதாரணத்திற்கு பார்த்தால் கோயமுத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் இந்த சம்பவத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் ஆராய வேண்டும் என்பதற்கு மாறாக இவர்களாகவே பல தகவல்களை கூறுகிறார்கள்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்,மாறாக அங்கே நடைபெறும் அனைத்து ரகசியங்களும் எங்களுக்கு தெரியும் என்று கூறுகிறார்கள்.இதையெல்லாம் தமிழ்நாடு அரசியலை சீர்குலைப்பதற்கான சதி என்றார்.

அந்த சதியில் ஒன்று தான் ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு தரவேண்டிய பணத்தை தடுத்து நிறுத்தினால் ஒரு நெருக்கடி ஏற்படும் என்றும், இரண்டாவதாக தமிழ்நாட்டிலே தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதும். இவ்வளவு பேசுகிறார்களே வட மாநிலங்களில் எத்தனை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

ஒரு பிரச்சனை என்பதை மத்திய அரசு மாநில அரசும் எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு பதிலாக அந்தப் பிரச்சனையை பேசி பேசி பெரிதாக்குகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பது ஏழை எளிய மக்களுக்காக துவங்கிய கட்சி நாங்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினையில் ஒன்றான பால் விலை உயர்வு என்பது அதற்குப் பொருத்தமான தீர்வைக் கண்டு தமிழ்நாடு அரசு அந்த சுமையை குறைக்க வேண்டும், மின்சார கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு பொருத்தமான வழிகளைக் கண்டு அந்த சுமைகளை குறைக்க வேண்டும்.

தமிழ்நாடு மக்களுக்கு எதிராக தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு எதிராக சதி வலையை விரித்து இருக்கிற பாரதி ஜனதா கட்சியை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். பொருளாதாரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தை போல் வேறு எந்த கட்சியும் தப்பு செய்யவில்லை, காரணம் 60 ஆண்டு காலமாக உருவாக்கி வைத்திருந்த பொதுத்துறை அனைத்தையும் எவரையும் கேட்காமல் வெறும் அமைச்சரவை தீர்மானங்களை வைத்து கொடுத்துவிட்டார்கள் இதுதான் இவர்களுடைய தந்திரம் ஆகும்.

தமிழ்நாட்டில் பால் விலை உயர்வு என்பது மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணம்தான் என்றும், அதிமுக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி கடலில் எவ்வாறு மணல் வீடு கரைந்து விடுமோ அது போல் அதிமுக கூட்டணி கரைந்து விடும் என்று கூறினார்.

இதையும் படிங்க:எந்த மாதிரியான தேர்தல்கள் இவை..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.