ஆட்சியர் பெயரிலேயே போலி வாட்ஸ் அப் கணக்கு! அலுவர்களுக்கு சென்ற அதிர்ச்சி குறுஞ்செய்தி

author img

By

Published : Jun 10, 2022, 11:58 AM IST

fake whatsapp account in name of collector

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு , ஆட்சியர் வினீத் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பபட்டு பண மோசடி முயற்சி அரங்கேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் பெயரில் , அவரது புகைப்படத்துடன் ஒரு வாட்ஸ் அப் கணக்கில் இருந்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்களுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. அதில் வேலை எவ்வாறு செல்கிறது என்று கேட்டதற்கு அலுவலர்கள் சிலர் பதிலும் அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து வங்கி விவரங்கள் கேட்கப்பட்டதால் சந்தேகம் அடைந்த அலுவலர்கள் இது குறித்து ஆட்சியர் வினீத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் . அப்போது ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், அது ராஜஸ்தான் என தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பு மாவட்ட ஆட்சியராக விஜயகார்த்திகேயன் இருந்த போது, அவரது பெயரில் போலியாக பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி சிலரிடம் மர்ம ஆசாமிகள் பணம் கேட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடன் கேட்டு மிரட்டியதால் தற்கொலை; ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.