2வது கல்யாணம் ஆன மூன்றாவது நாளே பெண் தற்கொலை.. கணவன் உள்ளிட்ட குடும்பத்தார் மீது வன்கொடுமை வழக்கு!
Updated on: Jan 27, 2023, 5:23 PM IST

2வது கல்யாணம் ஆன மூன்றாவது நாளே பெண் தற்கொலை.. கணவன் உள்ளிட்ட குடும்பத்தார் மீது வன்கொடுமை வழக்கு!
Updated on: Jan 27, 2023, 5:23 PM IST
முதல் கணவனை விட்டு பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் திருமணமான மூன்று நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கணவன் மாமியார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த லட்சுமணன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மனைவி பானுப்பிரியா (25), இவர் தினமும் திருப்பத்தூரில் உள்ள புதுப்பேட்டை ரோடு பகுதியில் சித்தாள் வேலைக்குச் செல்வது வழக்கம். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம்பாளையம் கிராமம் பகுதி சேர்ந்த கட்டிட மேஸ்திரி துருவன் (27), ஆள் பற்றாக்குறை காரணமாகப் புதுப்பேட்டை ரோடு பகுதிக்கு வந்து பானுப்பிரியாவை வேலைக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
இதன் காரணமாக இவர்களுக்குள் நாளடைவில் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே முதல் கணவனுக்குத் தெரியாமல் பானுப்பிரியா துருவனை மூன்று நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு காக்கணாம்பாளையம் பகுதிக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் மாற்றுச் சமுதாய பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக் கூறி திருமணமானவர்களைத் துருவன் வீட்டார் வீட்டில் சேர்க்கவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக பானுப்பிரியாவுக்கும் துருவனுக்கும் தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த பானுப்பிரியா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
இதன் காரணமாக குரிசிலாகப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், துருவன், அவருடைய தாய் வெண்ணிலா மற்றும் தம்பி பிரசாத் மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதல் கணவனை விட்டுப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மூன்று நாட்களே ஆன நிலையில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் போலீஸ் வாகனத்திற்கே அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்
