முருகனின் உயிருக்கு ஆபத்து: சிறை கைதிகள் உரிமை மையம் கடிதம்

முருகனின் உயிருக்கு ஆபத்து: சிறை கைதிகள் உரிமை மையம் கடிதம்
வேலூர் மத்திய சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக முதலமைச்சருக்கு சிறை கைதிகள் உரிமை மையம் கடிதம் எழுதியுள்ளது.
திருப்பத்தூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் முருகன்.
தனக்கு ஆறு நாள் பரோல் விடுப்பு வழங்கக் கோரி 13 ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். நேற்று (மே.14) காலை அவர் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் படுக்கையில் இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் முருகனின் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சருக்கு சிறை கைதிகள் உரிமை மையம் கடிதம் எழுதியுள்ளது.
இதையும் படிங்க: வீடுகளை இழந்தவர்களை ஆளுநரிடம் அழைத்துச்செல்வோம்"- ஆர்.ஏ.புரத்தில் ஆய்வு செய்த அண்ணாமலை பேட்டி
