திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் மட்டும் 14 இடங்களில் சோதனை

author img

By

Published : Sep 16, 2021, 3:48 PM IST

திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் மட்டும் 14 இடங்களில் சோதனை

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, அவரது உறவினர்களுக்கு சொந்தமான திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்: அதிமுக ஆட்சியில் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி. வீரமணி. இவர் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 654 விழுக்காடு சொத்து சேர்த்ததாக புகார்கள் குவிந்தன.

இதையடுத்து இன்று (செப்.16) கே.சி.வீரமணிக்கு தொடர்புடைய சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிகளில் மட்டும் 14 இடங்களில் அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில்,

  • திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ்
  • ஏலகிரி மலையில் அமைந்துள்ள ஹோட்டல் ஹில்ஸ்
  • ஜோலார்பேட்டை காந்தி ரோட்டில் உள்ள வீரமணியின் வீடு
  • பழைய ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி சாலையில் அமைந்துள்ள வீரமணியின் மற்றொரு வீடு
  • வீரமணியின் அண்ணன்கள் அழகிரி மற்றும் காமராஜ் வீடு
  • தமலேரிமுத்தூரைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ் வீடு
  • வீரமணியின் உறவினருக்கு சொந்தமான பீடி மண்டி
  • ஏலகிரியில் அமைந்துள்ள மகளிர் அணி தலைவி வீடு
  • ஜோலார்பேட்டை - நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம்
  • அதிமுக மாவட்ட பொருளாளர் ராஜா வீடு
  • நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் சாமராஜ் வீடு
  • நாட்றம்பள்ளியைச் சேர்ந்த குட்லக் ரமேஷ் வீடு
  • ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் வீடு

லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையை அடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணியின் வீட்டின் முன்பு 500க்கும் மேற்ப்பட்ட அதிமுகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டையில் மட்டும் 14 இடங்களில் சோதனை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது அதிமுகவினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வருமானத்துக்கு மேல் 654% சொத்துக் குவிப்பு... கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.