’ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் தூத்துக்குடி துறைமுகம் பாதிப்பு..!’ - கப்பல் முகவர்கள் சங்கம்

author img

By

Published : Sep 21, 2022, 6:51 AM IST

’ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் தூத்துக்குடி துறைமுகம் பாதிப்பு..!’ - கப்பல் முகவர்கள் சங்கம்

ஸ்டெர்லைட் ஆலை மூடியிருப்பது தூத்துக்குடி துறைமுகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கப்பல் முகவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70-ஆவது ஆண்டு பவள விழா கொண்டாட இருக்கும் நிலையில் கப்பல் முகவர்கள் சங்கத்தினர் நேற்று(செப்.20) செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “தூத்துக்குடியில் கப்பல் முகவர்கள் சங்கம் கடந்த 1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் மைனர் போர்ட்டாக இருந்தபோது சிறிய கப்பல்களில் சரக்குகள் ஏற்றுமதி நடைபெற்று வந்தது.

பின்னர் 1974-ல் மேஜர் போர்ட்டு அந்தஸ்து பெற்ற நிலையில், பெரிய கப்பல்கள் வரத்தொடங்கி பெரிய கப்பல்களில் ஏற்றுமதி நடைபெற்று வருகின்றது. அதைபோல் கண்டெய்னர்களும் அதிகபடுத்தி ஏற்றுமதியை விரிவுபடுத்தி உள்ளோம்.

’ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் தூத்துக்குடி துறைமுகம் பாதிப்பு..!’ - கப்பல் முகவர்கள் சங்கம்

எங்களது கப்பல் முகவர்கள் சங்கத்தின் டார்கெட்டான 1 மில்லியன் என்ற இலக்குடன் பணியாற்றி வருகின்றோம். இதற்காக திருச்சி, கருர், சேலம், பொள்ளாச்சி, கோவை, பெங்களூர் போன்ற பகுதிகளில் உள்ள பல போர்ட் கஸ்டமர்களுடன் பேசி கார்கோக்களை தூத்துக்குடி துறைமுகம் கொண்டு வர ஏற்பாடு செய்து வருகின்றோம்.

கரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டு வந்துகொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் கொழும்பிற்கு வரக்கூடிய பெரிய கப்பல்கள் எல்லாம் தூத்துக்குடி துறைமுகம் வரடியாமல் போய்கொண்டு இருந்த நிலையும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியைக் கண்டெய்னர் போர்ட் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையானது கப்பல் முகவர்கள் சங்கத்தினர் சார்பில் மத்திய அரசிடம் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான ஒப்புதலை பிரதமர் வழங்கி உள்ளார். இதற்காக 7ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட உள்ளது.

விரைவில் அவுட்டர் ஹார்பர் பணிகள் தொடங்க உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் நிறைய பெரிய கப்பல்கள் வரக்கூடும். இதனால் வேலைவாய்ப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது. அதைப் போல் தூத்துக்குடி துறைமுகம் போல் ஏற்றுமதி செய்ய சரியான வசதிகள் வேறு எந்த துறைமுகங்களிலும் இருக்காது.

குறிப்பாக, சாலை வசதி, இரயில் வசதி உள்ளிட்ட எல்லா விதமான வசதிகளும் அடங்கும் ஒரே துறைமுகம் தூத்துக்குடி துறைமுகம் மட்டும்தான். அதைபோல் கரோனா காலகட்டத்தில் மாலுமிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு அந்த நேரத்திலும் எந்த தடையும் இல்லாமல் சரக்குகள் எந்தவித தேக்கமும் இல்லாமல் முறையாக கையாண்டு வந்தோம் என்பதில் பெருமை கொள்கின்றோம். இலங்கை பிரச்சனையால் கார்கோ ஏற்றுமதி செய்வதில் கண்டெய்னர் பிரச்சினைகள் இருந்தது அவைகள் சரிசெய்யப்பட்டது.

அதைப் போல் கரோனா காலகட்டத்தில் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்ட கண்டெய்னர்கள் பல்வேறு துறைமுகங்களில் தேக்கமடைந்திருந்த நிலையில் தற்போது வரை 75சதவீதம் கண்டெய்னர்கள் திரும்பி வந்துள்ளது. இன்னும் 25 சதவீத கண்டெய்னர்கள் 6 மாத காலத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு இருக்கின்றது என்பது உண்மை. தொழிற்சலைகள் இல்லை என்றால் அது நிச்சயமாக துறைமுகத்தினை பாதிக்கும். அதைபோல் தூத்துக்குடிக்கு தொழிற்சாலைகள் வருவதை ஒருசில குரூப்புகள் தடுக்கின்றது.

இதனால் தூத்துக்குடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே தொழிற்சாலைகளை வரவிடாமல் தடுக்க நினைக்கும் கும்பலை அடையாளம் கண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் - சுரேஷ் கண்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.