விவி டைட்டானியம் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

author img

By

Published : Sep 7, 2021, 6:17 AM IST

Thoothukudi

வி.வி.டைட்டானியம் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டுவரும் வி.வி. டைட்டானியம் பிக்மென்ட்ஸ் தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுத்தன்மை கொண்ட புகையினால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்ட துணைச்செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் வி.வி.டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுத்தன்மை கொண்ட புகையினால் சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதும் மாசடைகின்றன.

இதனால் பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான கழிவுகளினால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதன் காரணமாக நிலத்தடி நீர் அசுத்தமடைகிறது. மேலும் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து விவசாய நிலங்களிலும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் வி.வி.டைட்டானியம் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் மாசுப்புகையை கட்டுப்படுத்தி சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க அலுவலர்களிடம் பல முறை மனு கொடுத்தும் என்ற பலனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.