மக்களை சூப்பராக ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனைப் படைத்தவர் முதலமைச்சர் - கடம்பூர் ராஜூ

author img

By

Published : Sep 25, 2022, 1:10 PM IST

மக்களை சூப்பராக ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

தூத்துக்குடி: பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்டம், அதிமுக சார்பில் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக இலக்கிய அணி இணைச் செயலாளருமான சின்னப்பன் தலைமையில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.கே. பெருமாள் முன்னிலையில், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

முன்னதாக கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து இசைமேதை நல்லப்ப சுவாமிகளின் 134ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நல்லப்பசுவாமிகள் நினைவிடத்திற்குச்சென்று அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொதுக்கூட்டத்திற்கு வந்த கடம்பூர் ராஜூ பேசுகையில், 'மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவை திமுக அமைச்சர்கள் மூர்த்தியும், பழனிவேல் தியாகராஜனும் ரிப்பன் வெட்டி ஒரு முறையும், குத்துவிளக்கேற்றி ஒருமுறையும் என ரிப்பன் எனக்கு...விளக்கு உனக்கு... என்பது போல் ஒரே நிகழ்ச்சியை இருமுறை தொடங்கி வைத்தனர். இந்தியாவில் அல்ல உலகத்திலேயே மக்களை சூப்பராக ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனைப் படைத்தவர், முதலமைச்சர் ஸ்டாலின் தான்.

மக்களை சூப்பராக ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனைப் படைத்தவர் முதலமைச்சர் - கடம்பூர் ராஜூ

தமிழ்நாட்டில் தினமும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை இது போன்ற குற்றச்செயல்கள் மிகவும் பெருகிவிட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி தருவதாக கூறுகிறார். அப்படி என்றால் சமூக விரோதிகளுக்கு மட்டும்தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஆட்சி. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார்' எனப் பேசினார்.

இதையும் படிங்க: தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்புகளுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.