வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் - பிஆர் பாண்டியன் வரவேற்பு

author img

By

Published : Aug 29, 2021, 7:27 AM IST

வேளாண்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான அரசின் தீர்மானத்தை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன் வரவேற்றுள்ளார்.

மன்னார்குடி : மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா பேரிடர் காலத்தில் அவசர அவசரமாக ஒரு சில மணி நேரங்களில் முடிவடைந்த பாராளுமன்ற கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்படாமல் விவசாயிகளுக்கு எதிரான பெரும் முதலாளிகளுக்கு ஆதரவான வேளாண் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியது.

தமிழ்நாட்டில் அப்போது பதவியில் இருந்த அதிமுக ஆட்சி தமிழக விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் சட்டத்தை ஆதரித்ததால் ஒட்டுமொத்த விவசாயிகளும் உலக அரங்கில் தலை குனிய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் தீர்மானம்


இந்நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்மொழிந்து அந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

இதனை அதிமுக எதிர்த்து வெளிநடப்பு செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் விவசாயிகளை மீண்டும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

வழக்குகள் தள்ளுபடி

முதலமைச்சர் உறுதியோடு சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல்,அதனை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. அவருக்கு விவசாயிகள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு வரைவு திட்ட அறிக்கையை ஒன்றிய ஜல்சக்தித்துறையிடம் அளித்து அதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா அனுப்பி வைத்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சர் தெரிவித்ததாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளது மிகுந்த உள்நோக்கம் கொண்டது.

பிஆர் பாண்டியன்

நிராகரிக்க வேண்டும்

கர்நாடகத்தின் வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்து இருப்பதை வரவேற்கிறேன். முன்னெச்சரிக்கையாக இந்த வழக்கு தொடரப்பட்டது தமிழ்நாட்டின் நலனுக்கு ஆதரவானது.

அதே நேரத்தில் கடந்த மாதம் காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை சந்தித்து கர்நாடகம் அளித்துள்ள வரைவுத் திட்ட அறிக்கையை ந நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கு பதிலளித்த ஆணையத் தலைவர் ஏற்றுக் கொள்வதா? நிராகரிப்பதா? என்பதை நான் மட்டும் முடிவு செய்ய இயலாது. ஆணையக் கூட்டத்தில் விவாதித்து பெரும்பான்மை அடிப்படையில் மட்டுமே அது குறித்து முடிவெடுக்க முடியும். எனவே உங்கள் தரப்பு கருத்தையும் நாங்கள் கருத்தில் கொண்டு ஆணையத்தில் முடிவெடுப்போம் என்று கூறினார்.

ஆதரவு தேவை

எனவே தமிழ்நாடு, புதுச்சேரி,கேரள மாநிலங்கள் இத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால் கர்நாடகாவின் வரைவுத் திட்ட அறிக்கையை நிராகரிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எனவே கேரளாவின் ஆதரவை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுப் பெற்று ஆணையக் கூட்டத்தில் கர்நாடகாவின் வரைவுத் திட்ட அறிக்கை நிராகரிப்பதற்கான நடவடிக்கையை போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்" இது குறித்து ஏற்கனவே கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஆதரவு கோரி உள்ளோம். தமிழ்நாடு அரசு ஆதரவு கோரினால் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்" என பிஆர்.பாண்டியன் கூறினார்.

இதையும் படிங்க : திமுக ஆட்சியில் மானூர் குளம் நிரம்பும்- துரைமுருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.