திருவாரூரில் தொடர் கனமழை: அரசு அலுவலர்கள் மீது மக்கள் புகார்

author img

By

Published : Nov 28, 2021, 12:31 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த நீரால் பொதுமக்கள் அவதிடைந்துள்ளனர். இதுவரை எந்த அலுவலரும் பார்வையிடவில்லை என மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூர்: கடந்த நான்கு நாள்களாகப் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாகப் பல்வேறு இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இதில் குறிப்பாக திருவாரூர் அருகே உள்ள பழவனக்குடி, மடப்புரம், பேட்டை, பாலூர், பூர்த்தாங்குடி, ஆண்டிப்பந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் முழுவதும் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் வடியாமல் சூழ்ந்துள்ளது.

இதனால் குழந்தைகள், வயதானவர்களை வைத்துக்கொண்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் மழை நீர் சூழ்ந்து இரண்டு நாள்கள் ஆகியும், எந்த ஒரு அரசு அலுவலரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்து பார்வையிடவில்லை எனவும், வீடுகள் முழுவதும் நீர் சூழ்ந்ததால் சமைக்கக்கூட முடியாமல் தவித்துவருவதாகவும் புலம்பிவருகின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில்கொண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: Rain Update: இன்று 21 மாவட்டங்களில் மழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.