புதிய பேருந்து நிலையம் சாலையை சீரமைக்க ஓட்டுநர்கள் கோரிக்கை

author img

By

Published : Oct 28, 2021, 2:01 PM IST

v

திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் 3 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள புதிய பேருந்து நிலையம் சாலையை சீரமைக்க ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் அருகே உள்ள விளமலில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு அதற்கான சாலை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

இப்புதிய பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், திருச்சி, சென்னை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பல்வேறு மாவட்களுக்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது புதிய பேருந்து நிலையத்தின் சாலை அவசரகதியில் போடப்பட்டதால் ஆறு மாதங்களிலேயே குண்டும் குழியுமாக காட்சியளிக்க தொடங்கியது. தற்போது மோசமான நிலையில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சாலையை சீரமைக்க ஓட்டுநர்கள் கோரிக்கை

மேலும் பேருந்துகள் பெரிய பள்ளங்களில் தட்டுத்தடுமாறி செல்வதால் பயணிகளுக்கு அசெளகரியம் ஏற்பட்டுவருகிறது. இரவு நேரங்களில் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் பள்ளத்தில் விழ நேரிடுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நிலைமை நீடித்து வருவதால் நகராட்சி நிர்வாகத்தினர் சாலையை சீரமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்த போது அவ்வப்போது ஜல்லி மட்டும் கொட்டி விட்டு செல்வதால் மீண்டும் மழைக்காலத்தில் பெரிய பள்ளமாக மாறி வருகிறது.

மேலும் நுழைவுவாயில் இருவழிப்பாதை இருந்து வந்த நிலையில் தற்போது அதில் ஒரு வழிப் பாதையை அடைந்து விட்டதால் மற்ற ஒரு பாதையில் பேருந்துகள் அனைத்தும் செல்வதால் இடையூறுகள் ஏற்படுவதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக குழிகளை மூடி தரமாக சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 15 ஆண்டுகளாக முடிவுக்கு வராத சாலை சீரமைப்பு - விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.