திருவண்ணாமலை மாவட்டத்தின் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கள நிலவரம்

author img

By

Published : Jan 29, 2022, 10:25 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தின் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கள நிலவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கின.

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை 22ஆம் தேதி நடைபெறுகிறது.

நகர்புற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்

எனவே, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அரசியல் கட்சியினரும் தேர்தல் களத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் , திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. அதையொட்டி திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகராட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற இருந்தனர்.

அதனைத்தொடர்ந்து செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், கண்ணமங்கலம், களம்பூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர் ஆகிய பேரூராட்சி அலுவலகங்களில் வேட்புமனுத் தாக்கல் நடைப்பெற்றது.

சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான செயல் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொருத்தவரை , 4 நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளைக் கொண்டது. இவற்றில் திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. இதில் 144 வாக்கு சாவடிகளும் ஆண், பெண் வாக்காளர்கள் 142135 நபர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மூன்று நகராட்சிகளான
1. ஆரணி - 33 வார்டுகள் உள்ளன, இதில் 65 வாக்குசாவடிகளில் 54881 வாக்காளர்கள் உள்ளன.
2. வந்தவாசி - 24 வார்டுகளும் 34 வாக்கு சாவடிகளும், 26724 வாக்காளர்கள் உள்ளன.
3. திருவந்திபுரம்(செய்யார்) - 27 வார்டுகள் மற்றும் 40 வாக்குசாவடிகளும் 32494 வாக்காளர்களும் உள்ளன.

நான்கு நகராட்சியில் 123 வார்டுகளும் 283 வாக்குசாவுடிகள் மற்றும் 256274 வாக்காளர்கள் உள்ளனர்.

10 பேரூராட்சிகளில்
1. செங்கம் - 18 வார்டுகளும் 27 வாக்கு சாவடிகள் உள்ளது.
2. புதுப்பாளையம் - 12 வார்டுகள் 12 வாக்குசாவுடிகள் உள்ளது.
3. போளூர் - 18 வார்டுகள் மற்றும் 6 வாக்குச்சாவடிகள் உள்ளது.
4. கண்ணமங்கலம் - 15 வார்டுகளும் , 15 வாக்குசாவுடிகளும் உள்ளது.
5. களம்பூர் - 15 வார்டுகளும் 15 வாக்குச்சாவடிகளும் உள்ளது.
6. சேத்பட் - 18 வார்டுகளும் 19 வாக்குச்சாவடிகளும்உள்ளது
7. தேசூர் - 12-வார்டுகளும் 12 வாக்குச்சாவடிகளும் உள்ளது
8. பெரணமல்லூர் - 12-வார்டு களும் 12 வாக்குச்சாவடிகளும் உள்ளன
9. கீழ்பெண்ணாத்தூர்- 15 வார்டுகளும் 15 வாக்குச்சாவடிகளும் உள்ளது.
10. வேட்டவலம்- 15 வார்டுகளும் 15 வாக்குச்சாவடிகளும் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 273 வார்டுகளும் 455 வாக்குசாவுடிகளும் 3,81325 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அதையொட்டி, வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ள 14 இடங்களிலும், கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர் மற்றும் உடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மனுத்தாக்கலில் பல்வேறு கட்டுப்பாடுகள்

மேலும், மனுத்தாக்கல் செய்ய ஊர்வலமாக வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர் 2000 ரூபாய் , பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவோர் 1000 ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும். எஸ்சி (SC) மற்றும் எஸ்டி( ST ) வகுப்பினர் டெபாசிட் தொகையில் 50% சதவீதம் செலுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெபாசிட் தொகையை ரொக்கமாக அல்லது கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீது இணைக்க வேண்டும்.

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் 42 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்,காவல்துறையினர் என பறக்கும் படை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சிக்கும், பேரூராட்சிக்கும் தலா 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 8 மணி நேரம் சுழற்சி முறையில் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதையும் படிங்க:நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.