429 மனுக்களில் 75 மட்டுமே ஏற்பு.. செய்யாறு எம்.எல்.ஏ வைத்த கோரிக்கை!

author img

By

Published : May 26, 2023, 1:23 PM IST

Etv Bharat

செய்யாறு அருகே வெம்பாக்கம் வட்ட ஜமாபந்தி நிறைவு விழாவில் 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை செய்யாறு எம்எல்ஏ பங்கேற்று பயனாளர்களுக்கு வழங்கினார்.

செய்யாறு எம்எல்ஏ ஜமாபந்தி நிறைவு விழாவில் 5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருவண்ணாமலை: வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 19ஆம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. செய்யாறு சப் கலெக்டர் ஆர்.அனாமிகா ஜமாபந்தி அலுவலராக பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று துறை வாரியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் கிராம நிர்வாக கணக்குகளை சரி பார்த்தார்.

ஜமாபந்தியின் நிறைவு நாள் மற்றும் விவசாயிகள் மாநாடு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் கலெக்டர் ஆர்.அனாமிகா தலைமை தாங்கினார். கடந்த 19ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தியில் மொத்தம் 429 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 75 மனுக்கள் ஏற்கப்பட்டன. 354 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய செய்யாறு எம்எல்ஏ ஜோதி பேசுகையில், ”காலப்போக்கில் இன்றை நிலையில் அனைத்தும் ஆன்லைனாக மாறிவிட்டது. இன்றைக்கு அதுவும் நம்முடைய முதல்வருடைய ஆட்சி மிக சிறப்பாக மக்களுக்கான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆன்லைனில் பட்டாக்கள் உடனடியாக பதிவு செய்த உடனே பட்டாக்கள் மாறுகிறது.

வருகின்றவர்களுக்கு இன்முகத்தோடு அவர்கள் கேட்கின்ற குறைகளை அதில் செய்ய முடியாத குறையாக இருந்தால் கூட இது நடக்காது என்று சொல்லி அவர்களுக்கு, இன்முகத்தோடு குறைகளை தீர்க்க இப்படி செய்ய வேண்டும் என மாற்றி செய்வதற்கு வழி இருக்கிறது என நீங்கள் எடுத்து கூறி பணியாற்ற வேண்டும். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கான ஆட்சி செய்கிறார்.

இதையும் படிங்க: ரூ.2000 நோட்டால் சிக்கிய மின்வாரிய அதிகாரி.. லஞ்சம் பெற்ற போது சிக்கினார்..

இன்றைக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்வதால் ஒரு கோடி ரூபாய்க்கு வேலை நடைபெறுகிறது. தார் சாலை, கழிவுநீர் கால்வாய் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நம்முடைய முதல்வர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டம் என தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதி 80%
நிறைவேற்றப்பட்டுள்ளது.

6 லட்சம் கோடி கடன் வைத்திருந்தாலும் கூட சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே தலைவர் நம்முடைய முதல்வர் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். அதே போல் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

விவசாயிகள் இலவச மின்சாரம் இன்றைக்கு நமக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். டாக்டர் கலைஞர் இல்லை என்றால் விவசாயிகள் கணக்கு பார்த்தால் உழவுக்கு கூட மிஞ்சாது என கூறுவார்கள். இங்கே பொதுமக்கள் 429 மனுக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் 75 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. சார் ஆட்சியரின் ஆலோசனைக்கு கொண்டு சென்று கண்டிப்பாக செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என பேசினார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வைகாசி மாத உண்டியல் காணிக்கை ரூ 2.16 கோடி!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.