திருவள்ளூரில் கூவம் ஆற்றில் கழிவுநீரை செலுத்திய லாரிகளுக்கு ரூ.40ஆயிரம் அபராதம்!

author img

By

Published : Aug 2, 2022, 9:53 PM IST

அபராதம்

திருவள்ளூர் கூவம் ஆற்றில் சட்டவிரோதமாக கழிவுநீரை செலுத்திய 4 லாரிகளுக்கு நகராட்சி அலுவலர்கள் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட கூவம் ஆற்றில் திருவள்ளூர் சுற்றுப்புறப்பகுதியில் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை வாகனங்களில் கொண்டு வந்து கூவம் ஆற்றில் செலுத்திவிட்டு சிலர் செல்கின்றனர்.

இதன் காரணமாக கூவம் ஆறு மாசுபட்டு, நிலத்தடி நீர் மாசுபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கூவம் ஆற்றில் கழிவு நீர்களைக் கலக்கவிடக் கூடாது என நகராட்சி அலுவலர்கள் பலமுறை அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும், இது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆக.2) காலை கூவம் ஆற்றில் கழிவுநீரைக் கொண்டு வந்து கொட்டிய 4 லாரியை அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மடக்கிப்பிடித்தனர். பின்னர் உடனடியாக திருவள்ளூர் நகர்மன்ற துணைத்தலைவர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மூலம் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜுலு, சுகாதார ஆய்வாளர் சுதர்சன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வந்தனர்.

மேற்கண்ட 4 லாரிகளையும் பறிமுதல் செய்து அந்த லாரிகளுக்கு தலா ரூ.10,000 ஆயிரம் வீதம் ரூ.40,000 அபராதம் விதித்தனர். மேலும் இனிவரும் காலங்களில் கழிவுநீரை கூவம் ஆற்றில் விட்டால் வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

திருவள்ளூரில் கூவம் ஆற்றில் கழிவுநீரை செலுத்திய லாரிகளுக்கு ரூ.40ஆயிரம் அபராதம்!

இதையும் படிங்க: தேவாலயத்தில் நிதி முறைகேடா? தட்டிக்கேட்டவரின் வீட்டிற்கு அடியாட்கள் அனுப்பிய பாஸ்டர்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.