வெடிபொருட்களை செயலிழக்க செய்த ராணுவத்தினர்

author img

By

Published : Sep 25, 2021, 8:59 AM IST

explosives-malfunction-in-the-trivandrum-area

திருத்தணி அருகே தமிழ்நாடு எல்லையில் ராக்கெட் லாஞ்சர்கள், வெடிபொருட்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை ராணுவத்தினர் செயலிழக்க செய்தனர்.

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இரும்பு உருக்கு ஆலையில் கடந்த 2008ஆம் ஆண்டு வெடிபொருட்கள் விபத்து ஏற்பட்டது.

வெளிநாட்டிலிருந்து கும்முடிபூண்டி இரும்பு உருக்காலைக்கு கப்பல் மூலம் எடுத்து வரப்பட்ட பழைய இரும்பு பொருட்கள், ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கி குண்டுகள், போன்ற பயங்கர வெடிபொருட்கள் இருந்தது. அப்போது ஏற்பட்ட விபத்தில் இலங்கை அகதிகள், கூலித் தொழிலாளர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

மக்கள் எதிர்ப்பு

அதன் பின்னர் இந்த வெடி பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் கும்மிடிப் பூண்டியில் இந்த ராக்கெட் லாஞ்சர்கள், வெடி பொருட்களை செயலிழக்கச் செய்ய கூடாது என்று அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் வேறு ஒரு இடத்தில் அதனை செயலிழக்கச் செய்ய மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உட் கோட்டத்திற்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே பாலாபுரம் ஊராட்சி எஸ்.கே.வி.கண்டிகையில் செயல்படும் கல்குவாரியில் வெடி பொருட்களை செயலிழக்கச் செய்ய பத்திரமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த கல்குவாரியை ராணுவத்தினர், காவல் துறையினர், வருவாய்துறையினர் ஆறு நாள்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

வெடிபொருட்கள் செயலிழக்கம்

மக்களுக்கு எச்சரிக்கை

எஸ்.கே.வி.கண்டிகையில் அருகில் உள்ள கதாநகரம் பஞ்சாயத்து, ஜனகராஜ்குப்பம் பஞ்சாயத்து, போன்ற பகுதிகளில் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயம், ஆடு, மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள் யாரும் எஸ்.கே.வி. கண்டிகை பகுதியில் கல்குவாரியில் அருகில் வரக்கூடாது என ராணுவத்தினர் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும், மக்களுக்கு தண்டோரா மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை திரிசூலத்தில் இருந்து ராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெடிமருந்து செயலிழக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கடந்த ஏழு நாள்களாக இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர் வெடி பொருட்கள் செயலிழக்க செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

ராக்கெட் லாஞ்சர்கள் செயலிழப்பு

அதன்படி, கல்குவாரி பகுதியில் 10 அடி ஆழத்திற்கு 50 அடி நீளத்திற்கு பல குழிகள் தோண்டப்பட்டது. இதில் ஒவ்வொரு பள்ளத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் பத்தடி நீளம் உள்ள இரண்டு அடிவிட்டமுள்ள ராக்கெட் லாஞ்சர்கள் நான்கு செயலிழப்பு செய்யப்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை 50க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் செயலிழக்க செய்யப்பட்டது. .மொத்தம் இந்த பகுதியில் எடுத்துவரப்பட்டு உள்ள ராக்கெட் லாஞ்சர்கள், வெடிபொருட்கள் விவரம்,

1) கையெறி வெடிகுண்டுகள்-210

2) ராக்கெட் லாஞ்சர்கள் - B.M.121mm ராக்கெட் 40

3) ராக்கெட் லாஞ்சர் பெரியது- MM, மோட்டார்- ரக நம்பர்-81, இந்த ரகம் மொத்தம் 210 பீஸ்,ராக்கெட் லாஞ்சர்கள்,

4) வெடிமருந்துகள், கையெறி குண்டுகள் என மொத்தம் 820 எடுத்து வரப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ஆம் தேதி வரை இந்த வெடிபொருட்கள் வெடிமருந்துகள் பாலா புரம் பஞ்சாயத்து எஸ்.ஆர்.வி கண்டிகை பகுதியில் செயலிழக்க செய்யப்பட்டு வருவதால் இந்த பகுதியில் யாரும் காவல்துறை தடுப்புகளை மீறி செல்ல வேண்டாம் என்று காவல் துறை வருவாய்த் துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்த பகுதியில் வெடிபொருட்கள் வெடிமருந்துகள் ராக்கெட் லாஞ்சர்கள் செயலிழக்க செய்யப்பட்டு வரும் காரணமாக சுமார் 15 கிலோ மீட்டருக்கு இதன் வெடிபொருட்கள் வெடிப்பு சத்தம் விண்ணைப் பிளந்து புகைமூட்டமாக காணப்படுகிறது. 13 ஆண்டு காலம் திருவள்ளூர் மாவட்டத்தில் மறைத்து வைத்திருந்த இந்த ராக்கெட் ராக்கெட் லாஞ்சர்கள், வெடிபொருட்கள் எந்த நாட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி இரும்பு உருக்கு ஆலைக்கு வந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த பொய்யான தகவல் - திமுக கார்த்திகேய சிவசேனாபதி டிஜிபியிடம் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.