விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான் - போராட்டத்திற்குப் பிறகு மீட்ட தீயணைப்பு துறையினர்

விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மான் - போராட்டத்திற்குப் பிறகு மீட்ட தீயணைப்பு துறையினர்
கும்மிடிப்பூண்டி அருகே காரம்பேடு கிராமத்தில் விவசாய கிணற்றில் விழுந்த புள்ளி மானை, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் சாதுரியமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரம் பேடு கிராமத்தில் கிணற்றில் புள்ளிமான் ஒன்று விழுந்துவிட்டதாக மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் புள்ளிமானை மீட்கும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துவுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் வனத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் இறங்கி புள்ளி மானை பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் மீட்டு மாதர்பாக்கம் வனச்சரக அலுவலர் சுரேஷ் பாபுவிடம் ஒப்படைத்தனர். பின்னர் புள்ளிமானை வனத்துறையினர் நேமலூர் வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.
இதையும் படிங்க: பூ மிதிக்கும் திருவிழாவில் தவறி விழுந்த சாமியார்- கர்நாடகா திருவிழாவில் பதற்றம்
