கோயில்களில் மூன்று வேளை அன்னதானம் - முதலமைச்சர் தொடங்கி வைப்பு

author img

By

Published : Sep 17, 2021, 6:22 AM IST

Updated : Sep 17, 2021, 7:27 AM IST

முதலமைச்சர்

திருச்செந்தூர், திருத்தணியில் உள்ள முருகன் கோயில்கள், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்களில், மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை: திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முதலமைச்சருடன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அலுவலர்கள் பங்கேற்றனர். இத்திட்டத்தில் தற்போது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் ஆகிய இரண்டு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டமானது விரிவுப்படுத்தப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அன்னதான திட்டத்தின் வாயிலாக இம்மூன்று கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated :Sep 17, 2021, 7:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.