ஓட்டுனரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்... பொதுமக்கள் சாலை மறியல்

author img

By

Published : Apr 24, 2019, 2:57 PM IST

திருவள்ளூர்: சரக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்களை கைது செய்யக்கோரி ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் சரக்கு வாகன ஓட்டுநர் ஜேம்ஸ் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர் பன்னீர் செல்வம், தண்டபாணி ஆகிய மூன்று பேரிடமும் உரிய அனுமதிச் சீட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதனை ஏற்காமல் சுங்கச்சாவடியில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் ஐந்து பேர் அவர்களை தாக்கியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் சுங்கச்சாவடி கண்ணாடிகளை உடைத்து அந்த ஊழியர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன் மற்றும் சோழபுரம் காவல் துறையினர் உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

chozhavaram
Intro:திருவள்ளூர் அருகே சரக்கு வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதால் ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கைது செய்யக்கோரி சுங்கச்சாவடி கண்ணாடி அனைத்தையும் உடைத்து சுங்கச்சாவடி முற்றுகை இட்டு ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Body:திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்வழியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏற்பட்டதில் காவல்துறையை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் ஜேம்ஸ் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர் பன்னீர் செல்வம் மற்றும் தண்டபாணி 3 பேரையும் உரிய பாஸ் அனுமதிச் சீட்டு இருந்தும் அதனை ஏற்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுங்கச்சாவடி அருகில் வைத்து அதில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் தாக்கியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த சக ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் கைது செய்யக் கோரியும் சுங்கச்சாவடி கண்ணாடிகள் நான்கினை அடித்து நொறுக்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் மற்றும் சோழபுரம் போலீசார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பொன்னி சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலில் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன தொடர்ந்து வாகனங்கள் சுங்க கட்டணம் என்று செல்கின்றது.. சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் பொதுமக்கள் கலைந்து சென்றனர் ஆனால் சுங்கச் சாவடியில் வாகனங்கள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக செல்கின்றன. etv செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ் பாபு


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.