அரசு அதிகாரியை மிரட்டும் திமுக பிரமுகர்....

author img

By

Published : Sep 28, 2022, 7:39 AM IST

கடுத்துக் கிடந்த பாதம்   நகரமெங்கும் ஓடி அலைந்தான் ஓர் முழுக்கைச் சட்டையணிந்த நவீன நாடோடி அவன் திரிந்த நகரம் அது நவீனத்தார்களின் காடு தன் பசியெனும் பெருங்கனலை ஆற்ற ஓர் சோலைவனம் தேடியலைந்தான்  அந்தச் சோலைவனப் பாதையின் வழிவிட்டு அவன் விழி நீங்கவில்லை வழியெங்கும் இவன் கண்டதெல்லாம் கால்கள் மட்டுமே தேய்ந்துத் கிழிந்தக் கால்கள், பாதம் கடுத்த கால்கள், நிலவாய் மிளிர்ந்த கால்கள், பிளவாய் முதிர்ந்த கால்கள் என அத்தனை வகை கால்களை அக்கணம் வரைக் கண்டதில்லையவன்  இவன் கண்ட கால்கள் எதுவும், எதற்கும் நிற்கவில்லை ரயில் சத்தம் கேட்டால் ஓர் ஓட்டம், மணி சத்தம் கேட்டால் ஓர் ஒட்டம்,  தடி சட்டம் கேட்டால் ஓர் ஓட்டம் என ஓட்டங்களிலும் அன்று அவன் வேற்றுமைகள் கண்டான்  அத்தனை சத்தங்களுக்கும் ஓர் மைய சத்தம் பசி எனும் ரீங்காரம் தான் அச்சத்தம் செவியில் ஓயாது ஒலிப்பது இந்த நவீனத்தார்களின் அன்றாடம்  அச்சத்தம் நவீனத்தார்களின் செவிகளில் சமமாக ஒளிக்கும் ஓர் பொதுவுடமைவாதி, அச்சத்தம் எவர் செவிக்கும் இரக்கம் காண்பிக்காததோர் சர்வாதிகாரி இத்தனை ஓலங்களுக்கு மத்தியிலும் தன் கனல் சூட்டில் வெந்து நடந்தான் நாடோடி நகரமெங்கும் அவன் கனலை அணைக்க ஓர் சொட்டு நீருமில்லை அந்நகரத்து நவீனத்தாருக்கு எவர் கனல் அணைக்கவும் வழிதெரியாது தினப் பகலில் வெந்து வாடிய உடல்களை இரவுக் காற்றாடிகளில் ஆற்றுவர் அந்த நவீன நாடோடியின் பலகாலங்கள் நொடிப்பொழுதென இந்நகரத்தில் கழிய என்றோ ஓர் நாள் ஓர் தனிப்பட்ட இடுகாட்டில்,  அந்நாடோடி பாதம் மட்டும் வெந்திதாது இருந்ததாய் இரு வெட்டியான்கள் பேசிக்கொண்டனர் அவனின் பெருங்கனலில் அவன் பாதம் மட்டும் எப்படி எரியாதிருந்ததோ...?

அரசு அதிகாரியை நடு ரோட்டில் வைத்து திமுக பிரமுகர் மிரட்டும் காணொலி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திருநெல்வேலி: உவரி மீனவ கிராமத்தில் 300க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதில் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்கு மடி வலை மூலம் மீன் பிடித்து வந்துள்ளனர். சுருக்குமடி வலை பயன்படுத்த கடந்த 2000ஆம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதனை எதிர்த்து மீனவ மக்கள் ஒரு சிலர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து சுருக்குமடி வலை பயன்படுத்திய மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரும், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணிராய் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதோடு அதிகாரிகளைத் தரக்குறைவாக வார்த்தைகளால் திட்டியுள்ளார். காவல்துறையினர் முன்பே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் இதனை தனது செல்போனில் படம் பிடித்த நிலையில் தற்போது அது வைரலாகியுள்ளது.

அரசு அதிகாரியை மிரட்டும் திமுக பிரமுகர்

அந்தோணி ராய் தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டுவதும் அடிக்க கையை ஓங்குவதும் காட்சியில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக, இதுகுறித்து ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன் குமாரிடம் கேட்டபோது, ”சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது. இதனால் இந்த பகுதியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகர் மிரட்டுவது தொடர்பாக உவரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்திய அரசின் திட்டங்கள் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது - இணை அமைச்சர் அஸ்வினி குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.