டிசம்பர் இறுதிக்குள் மதுரை - போடி இடையே ரயில் சேவை - அதிகாரிகள் தகவல்!

author img

By

Published : Nov 24, 2022, 6:23 PM IST

Updated : Nov 24, 2022, 8:24 PM IST

மதுரை-போடி ரயில் சேவை: அதிகாரிகள் ஆய்வு

மதுரை - போடி இடையேயான ரயில் பாதை பணிக்காக ரயில்வே எஞ்ஜின் சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி: மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தேனி வரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்று, மதுரையிலிருந்து தேனி வரை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், போடிநாயக்கனூர் வரை 2-ம் கட்டமாக ரயில்வே பாதை திட்டத்தில், ரயில் நிலையம் மற்றும் ரயில் செல்லும் வழியில் அமைந்துள்ள 2 ரயில்வே கேட்டுகள் ஆகியவை உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இவற்றை இன்று (நவ.24) தெற்கு ரயில்வே முதன்மை செயற்பொறியாளர் இளம் பூரணன் சிக்னல்கள் நிறுவப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்‌.

முதற் கட்ட பணியாக தேனியில் இருந்து போடி வரை சுமார் 16 கி.மீ உள்ள மூன்று கேட் சிக்னல்கள் மற்றும் ஸ்டேஷன் அருகிலுள்ள சிக்னல் பாயிண்ட்களில் ஆய்வு செய்வதற்காக தேனியில் இருந்து ரயில் என்ஜின் போடி ரயில்வே நிலையம் வரை வந்தது.

மதுரை-போடி ரயில் சேவை: அதிகாரிகள் ஆய்வு

பின்னர், ட்ராக் பைண்டிங் இன்ஜின் கொண்டு வரப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதை இணைப்புகள், சிக்னல்கள், ரயில்வே கேட்டில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதைதொடர்ந்து வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் போடிக்கு மதுரையிலிருந்து ரயில் விடுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளராக யோகிபாபு.. வைரலாகும் புகைப்படம்!

Last Updated :Nov 24, 2022, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.