Clash in Theni: நினைவு தினக் கூட்டத்தில் மோதல் - கார் கண்ணாடிகள் உடைப்பு

author img

By

Published : Dec 28, 2021, 8:57 PM IST

கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்

Clash in Theni: தேனியில் நினைவு தினம் அனுசரிப்பதற்காக வந்த இடத்தில் இரண்டு அமைப்பினர் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில் இருவர் காயம் அடைந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Clash in Theni: அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தவர், மறைந்த எஸ்.ஆர்.தமிழன். கடந்த 2014ஆம் ஆண்டில் இறந்த இவரின் இறுதி ஊர்வலத்தின் போது அல்லிநகரம் பகுதியில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் உருவானது.

அப்போதிலிருந்து எஸ்.ஆர்.தமிழன் நினைவு தினத்தன்று பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அரசியல் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.ஆர்.தமிழனின் 7ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று(டிச.28) தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது ஆதரவாளர்களுடன் 20-க்கும் மேற்பட்ட வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

இவர்களது வாகனம் தேனி புதிய பேருந்து நிலையம் செல்லும் புறவழிச்சாலை சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது, தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

நினைவு தின அனுசரிப்புக் கூட்டத்தில் இரு அமைப்பினர் மோதல்

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி வாகனம் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இந்த மோதலில் இருவர் காயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌. இரு அமைப்பைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த மோதல் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் காயமடைந்தவர்களுடன், தென் இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் காயமடைந்த பாலமுருகன், ஹரிகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், பாண்டியராஜன் ஆகிய 4 பேர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: NEET PG EXAM: டெல்லி வீதிகளில் மருத்துவர்கள் போராட்டம்; மருத்துவ நிறுவனங்கள் மூடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.