சகோதர யுத்தம்: மீண்டும் தம்பியை வீழ்த்திய அண்ணன்

சகோதர யுத்தம்: மீண்டும் தம்பியை வீழ்த்திய அண்ணன்
தேனி: ஆண்டிபட்டி தொகுதியில் நிலவிய சகோதரப் போரில் அண்ணன் (திமுக) வெற்றிபெற்றார். இரண்டாவது முறையாகத் தோல்வியைத் தழுவினார் தம்பி (அதிமுக).
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 150 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் லோகிராஜனை வீழ்த்தி திமுக வேட்பாளர் மகாராஜன் வெற்றிபெற்றுள்ளார்.
லோகிராஜன், மகாராஜன் சகோதரர்கள் ஆவர். கடந்த இடைத்தேர்தலின்போதும் லோகிராஜன் தனது அண்ணன் மகாராஜனிடம் தோல்வியைத் தழுவினார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்குகள் நிலவரம்:
திமுக - மகாராஜன் - 92,057.
அதிமுக - லோகிராஜன் - 84,542.
அமமுக - ஜெயக்குமார் - 11,746.
மநீம - குணசேகரன் - 2,958.
நாம் தமிழர் - ஜெயக்குமார் - 11,034.
நோட்டா - 1,308.
மொத்தமுள்ள 28 சுற்று முடிவில் திமுக வேட்பாளர் மகாராஜன் 7,515 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டாலும் திமுக வேட்பாளர் மகாராஜனின் வெற்றி உறுதியாகியுள்ளது.
