குரங்குகளின் அட்டகாசம் - சுற்றுலாப் பயணிகள் அவதி!

author img

By

Published : Feb 24, 2022, 3:01 PM IST

குன்னூரில் குரங்குகளால் தொல்லை

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுலா தலங்களில் குரங்குகளால் தொல்லை அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி: குன்னூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் தற்போது குன்னூர் சுற்றுலா தலங்களான சிம்ஸ் பார்க், காட்டேரி பார்க் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளிலும் வலம் வருகின்றது.

உணவு தேடி நகரப்பகுதிகளிலும் சுற்றித்திரிகின்றன. மேலும் குடியிருப்புப்பகுதிகளில் புகுந்து உணவுப்பொருட்களை எடுத்து அட்டகாசம் செய்கின்றன.

குரங்குகளால் சுற்றுலாப் பயணிகள் அச்சம்

இது தவிர சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்துகின்றன. சில நேரங்களில் மின் வயர்களை அறுக்க முயன்று குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளன.

இதனால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சுற்றுலாத் தலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Valimai FDFS:செண்டை மேளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.