Operation Tiger T23 - 10ஆவது நாளாக ஆட்கொல்லி புலியைத் தேடும் பணிகள் தீவிரம்

author img

By

Published : Oct 4, 2021, 3:56 PM IST

Updated : Oct 4, 2021, 4:48 PM IST

புலியை தேடும் பணி தீவிரம்

நீலகிரி கூடலூர் பகுதியில் சுற்றித் திரியும் ஆட்கொல்லி புலியைப் பிடிக்க, இரண்டு கும்கி யானைகள், மூன்று மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் வனத் துறையினர் புலியைத் தேடி வருகின்றனர்.

நீலகிரி: கூடலூர் மசினக்குடி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகள், நான்கு மனிதர்களை வேட்டையாடிக் கொன்ற புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அதிரடிப் படையினர், வனத்துறையினர் ஆகியோர் 10ஆவது நாளாக புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புலி தொடர்ந்து இடம்பெயர்ந்து, வனத்துறையினரிடம் சிக்காமல் போக்குக்காட்டி வருகிறது.

இரண்டு மருத்துவக்குழுவினர், 50-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் சிங்காரா பகுதியில் T23 என அடையாளப்படுத்தப்பட்ட புலியைத் தேடி வருகின்றனர்.

கும்கி யானைகள் வருகை

முதன்முறையாக மோப்பநாயின் உதவியுடன் புலியின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோவையிலிருந்து புலியைப் பிடிக்க தனிப்பயிற்சி பெற்ற நான்கு எலைட் படையினர் முதுமலை வந்துள்ளனர்.

ஆட்கொல்லி புலியைத் தேடும் பணிகள் தீவிரம்

பொதுமக்கள் யாரும் வனப்பகுதிகளில், கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச்செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து சீனிவாசன், உதயன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு புலியைப் பிடிக்கும் வனத்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: T23 புலியை சுட்டுக்கொல்ல எதிர்ப்பு தெரிவித்த வழக்கு நாளை விசாரணை

Last Updated :Oct 4, 2021, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.