குன்னூர் அருகே அரசுப்பள்ளியை சேதப்படுத்திய கரடி - மாணவர்கள் அச்சம்

author img

By

Published : Sep 21, 2022, 6:48 PM IST

குன்னூர் அருகே அரசுப் பள்ளியை சேதப்படுத்திய கரடி

குன்னூர் அருகே உள்ள உபதலை அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கதவை உடைத்து சமையலறையை கரடி சேதப்படுத்தியது

நீலகிரி: குன்னூர் பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குள் குடியிருப்புப்பகுதியில் வலம் வருகின்றன. குறிப்பாக கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள உபதலை அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையலறை கதவை, கரடி ஒன்று உடைத்து பொருட்களைச் சேதப்படுத்திச்சென்றுள்ளது.

இதன்காரணமாக பள்ளி மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பள்ளியைச் சுற்றி புதர்கள் மண்டி கிடப்பதாலும் வனவிலங்குகளும் விஷ ஜந்துக்களும் பள்ளிகளுக்குள் வந்து செல்வதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.

குன்னூர் அருகே அரசுப்பள்ளியை சேதப்படுத்திய கரடி - மாணவர்கள் அச்சம்

மேலும் உபதலை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும்; எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் சுற்றி திரியும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் எனவும், பள்ளியைச்சுற்றியுள்ள புதர்களை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆ.ராசா எம்.பி.க்கு எதிராக போராட்டம்...நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.