மானஸ சஞ்சரரே....தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவுக்கு நடப்பட்ட பந்தகால்

author img

By

Published : Dec 4, 2022, 8:51 PM IST

ஜி கே வாசன்

கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவிற்கு முன்னோட்டமாக பந்தகால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர்: கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர் ஸ்ரீ சத்குரு தியாகராஜர். தெலுங்கு மொழி கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதும் அறியச்செய்து புகழ் பெற்றவர்.

ஸ்ரீ சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176ஆவது ஆராதனை விழா வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் தியாக பிரம்ம மஹோத்ஸவ சபை சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விழாவை முன்னிட்டு திருவையாறு காவிரி கரையில் தியாகராஜர் முக்தி அடைந்த இடத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு பூஜை செய்து பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தியாகராஜர் சித்தியடைந்த பகுள பஞ்சமி தினமாகிய ஜனவரி 11-ஆம் தேதி அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்கள் வந்திருந்து, ஒன்றுசேர பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும், இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

தியாக பிரம்ம சபை தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

விழாவை தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளதாக தியாக பிரம்ம சபை தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீராத வலியால் துடித்த பெண்ணின் வயிற்றில் இருந்து 3.5 கிலோ கட்டி அகற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.