இசையின் இசைவில் திருவையாறு பஞ்சரதன் கீர்த்தனை

author img

By

Published : Jan 11, 2023, 11:20 AM IST

இசையின் இசைவில் திருவையாறு பஞ்சரதன் கீர்த்தனை இசை அஞ்சலி!

தஞ்சாவூர் திருவையாற்றில் 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர்: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு ஸ்ரீதியாகராஜர் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள், கர்நாடக சங்கீத உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தின. கர்நாடக இசைப்பிரியர்களால் தியாகராஜரை நினைவு கூறும் வகையில், திருவையாற்றில் ஸ்ரீ தியாக பிரம்ம சபா சார்பில் ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.

தஞ்சாவூர் திருவையாற்றில் 100க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்

அந்த வகையில், தியாகராஜரின் 176ஆவது ஆராதனை விழா ஜனவரி 6ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை இசை அஞ்சலி செலுத்தும் விழா இன்று (ஜன.11) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து புல்லாங்குழல் கலைஞர்கள் வாசிக்கும் கீர்த்தனையுடன், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள், வாத்திய கலைஞர்கள், இசை ரசிகர்கள் ஆகியோர் பஞ்சரத்ன கீர்த்தனைகளான நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகங்களை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

இவ்விழாவில் தியாக பிரம்ம சபா தலைவர் ஜி.கே.வாசன், இசைக் கலைஞர்களான சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, ஒ.எஸ்.அருண், ஏ.கே.பழனிவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இசை அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் திருக்கைத்தல சேவை உற்சவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.