தஞ்சையில் மீண்டும் தென்னை வளாகம்: ஜெயரஞ்சன் ஆய்வு

author img

By

Published : Aug 21, 2021, 9:25 AM IST

ஜெயரஞ்சன் ஆய்வு

பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கும் தென்னை வணிக வளாகத்தை மீண்டும் இயக்குவது தொடர்பாக தமிழ்நாடு வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் நேரில் ஆய்வுசெய்தனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதியான வளவன்புரம், பொன்னவராயன்கோட்டை பகுதியில் அமைந்துள்ள தென்னை வணிக வளாக மையம் நீண்ட நாள்களாக இயங்காமல் இருந்துவருகிறது.

இதனை அடுத்து திமுக தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தத் தென்னை வணிக வளாகம் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அலுவலர்கள் ஆகியோர் இன்று வணிக வளாகத்தைப் பார்வையிட்டனர்.

தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்கள்: கட்டுப்படுத்தும் சிறந்த வழிகள்!

அதனைத் தொடர்ந்து வணிக வளாகத்தில் உள்ள தென்னைநார் மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி செய்யும் அக்ஸான் எக்ஸியம் பிரைவேட் லிமிடெட் கம்பெனியைப் பார்வையிட்டு விளக்கம் கேட்டு அறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இதனையடுத்து பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை, பேராவூரணி எம்எல்ஏ அசோக் குமார் ஆகியோரிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

  • #தஞ்சாவூர் மாவட்டம் #பட்டுக்கோட்டை வேளாண் விற்பனை குழுவின் மூலம் செயல்படுத்தப்படும் #தென்னை வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநில வளர்ச்சி கொள்கை குழுவினர். உடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள், தென்னை விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர் #TRBRajaa #SDPC pic.twitter.com/SBqEN2dROf

    — Mannargudi (@MannargudiMLA) August 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிகழ்ச்சியில வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 3 அடி உயர தென்னை மரம்: குலைகுலையாய் காய்க்கும் தேங்காய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.