அரசு நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள்

author img

By

Published : Nov 22, 2022, 12:07 PM IST

Updated : Nov 22, 2022, 12:34 PM IST

Etv Bharat

தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பொன்னியின் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மற்றும் திமுகவினர் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்தனர்.

தஞ்சை : ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் காமராஜ் மார்க்கெட்ரூ 20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மூலம் காணொளி காட்சி மூலம் திறக்கப்படுகிறது.

இதனை காலை 10 மணிக்கு தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து தற்போது தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பொது வெளியில் திரையிடப்பட்டது.

அரசு நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள்

அந்த படத்தை எம்எல்ஏக்கள் நீலமேகம், சந்திரசேகரன், தஞ்சை மேயர் ராமநாதன்,அரசு அதிகாரிகள் திமுகவினர், பொதுமக்கள் அமர்ந்து பார்த்தனர்.

இதையும் படிங்க : திருவண்ணாமலை: கார்த்திகை சோமவார பிரதோஷம்!

Last Updated :Nov 22, 2022, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.