நான் பட்டக் கஷ்டங்களை என் மகன் சந்திக்கக் கூடாது - வைகோ

author img

By

Published : Oct 9, 2021, 6:55 PM IST

வைகோ

எனது மகன் அரசியலுக்கு வருவதை துளியளவும் விரும்பவில்லை, நான் பட்டக் கஷ்டங்களை என் மகன் சந்திக்கக் கூடாது என வைகோ தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக குருவிகுளம், கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கலிங்கப்பட்டி ஊராட்சியில் மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, அவரது மகன் துரை வைகோ ஆகியோர் தங்களது வாக்கினை பதிவுச் செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி வெற்றி பெறும். தலிபன்கள் ஆட்சியைப் போல உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றிருக்கிறது. விவசாயிகளை தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றார்.

நான் பட்டக் கஷ்டங்கள்...

தொடர்ந்து அவரது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, “எனது மகன் துரை வைகோ அரசியலில் வருவதற்கு துளி அளவும் எனக்கு விருப்பமில்லை.

செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ

நான் 28 ஆண்டுகாலம் அரசியலில் நூற்றுக்கான போராட்டங்கள் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை, லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் என ஏராளமான கஷ்டங்களைச் சந்தித்துள்ளேன்.

நான் பட்டக் கஷ்டங்களை எனது மகன் சந்திக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லை உள்ளாட்சித் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.