தீண்டாமை வன்கொடுமை...மாவட்ட ஆடசியர் விசாரணை நடத்த உத்தரவு

author img

By

Published : Sep 29, 2022, 6:33 AM IST

தென்காசி மாவட்டத்தில் தீண்டாமை வன்கொடுமை

தென்காசி மாவட்டம் ராயகிரி கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி: சிவகிரி சேர்ந்த மதிவாணன் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனுவில், கடந்த மார்ச் மாதம் தென்காசி மாவட்டம் ராயகிரி கிராமத்தில் நண்பரின் தந்தை இறந்த நிகழ்ச்சிக்கு நண்பர்களுடன் சென்றேன்.

நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் அங்கிருந்த சிலர் இந்த இடத்திற்கு நீ எப்படி இங்கு வரலாம் என கூறி ஜாதியை கூறி திட்டினார்கள். மேலும் நான் அங்கு இருந்தால் இறந்தவரின் உடல் இறுதி சடங்கிற்கு யாரும் ஒத்துழைக்க மாட்டோம் என தெரிவித்தனர். அங்கிருந்து உடனடியாக நான் வெளியேற்றப்பட்டேன்.

அங்கு இருந்த ஜாதி அமைப்பின் நிர்வாகிகள்சோழராஜன் அம்மையப்பன் கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் ஜாதியை கூறி அவமரியாதையாக திட்டினார்கள்.

மேலும் என்னை அழைத்துச் சென்ற நண்பர்களை மறுநாள் அழைத்து என்னை இறப்புக்கு அழைத்து சென்றதால் அவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லி உள்ளனர்.மேலும் அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். அதன் அடிப்படையில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. அவர்களை கைது செய்யவும் இல்லை, விசாரணையும் செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை அக்டோபர் 12ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மருமகளை கொலை செய்த மாமனார் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.