பக்தர்கள் இல்லாமல் நடந்த சங்கரன்கோயில் ஆடித்தபசு விழா!

author img

By

Published : Jul 23, 2021, 9:48 PM IST

tenkasi Aadithapasu festival

சங்கரன்கோயில் பிரசித்திபெற்ற சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தென்காசி : சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்திபெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த விழாவைக் காண தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம்.

கடந்த 13ஆம் தேதி இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றது. நிகழ்வின் 11ஆம் திருவிழாவான இன்று "அரியும் சிவனும் ஒன்று" என்பதை உணர்த்தும் வகையில் கோமதி அம்மனுக்கு காட்சி தரும் ஆடித்தபசு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்தாண்டு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக, இவ்விழா கோயிலுக்குள் உள்பிரகாரப் பகுதியில் நடத்தப்படுவதால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆடித்தபசு விழா

மேலும் கட்டளைதார்கள், இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள் திரளானோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.இவ்விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம், கட்டளைதாரர்கள் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: நீலகிரியில் கனமழை - இருளில் மூழ்கிய கிராமங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.